உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புயலால் பாதிக்கப்பட்ட சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு

புயலால் பாதிக்கப்பட்ட சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு

திண்டிவனம்: திண்டிவனம் பகுதிகளில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சாலைகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கொட்டி தீர்த்த மழையால் நெடுஞ்சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்தும், வெள்ள நீரால் சாலைகள் மற்றும் சிறிய பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து தடை பட்டது.இதனை தொடர்ந்து திண்டிவனம் கோட்ட நெடுச்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பேரில் கோவடி கிராமத்திலிருந்து தென் நெற்குணம் செல்லும் சாலையில் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதேபோல் பெருமுக்கல் குன்னப்பாக்கம் மற்றும் நொளம்பூர் -ஆவணிப்பூர் சாலையை நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் மூலம் சீரமைக்கப்ட்டது. இதே போல் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலை அதிகாரிகளின் உத்திரவு படி நெடுஞ்சாலைதுறை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் ஆங்காங்கே தங்கியிருந்து போக்குவரத்து மற்றும் சாலைகளை உடனுக்குடன் சீரமைத்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை