உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஐயப்பன் சாமியை இழிவு படுத்திய பாடகி மீது ஹிந்து முன்னணி புகார்

ஐயப்பன் சாமியை இழிவு படுத்திய பாடகி மீது ஹிந்து முன்னணி புகார்

திருவெண்ணெய்நல்லுார்: ஐயப்பன் சாமியை இழிவுபடுத்தும் வகையில் பொது வெளியில் பாடல் பாடிய பாடகி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணியினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.கார்த்திகை மாத முதல் நாளிலிருந்து ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஐயப்பனை வேண்டி மாலை அணிந்து சபரிமலை சென்று வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல திரைப்பட இயக்குனர் நடத்தி வரும் நீலம் கல்சுரல் சென்டர் சார்பில் நடத்தப்பட்ட மார்கழியில் மங்களிசை 2023 என்ற நிகழ்ச்சியில் பெண் பாடகர் ஒருவர் சுவாமி ஐய்யப்பன் குறித்து பாடிய பாடல் சர்ச்சையாகியுள்ளது.இது ஹிந்து மக்களிடம் பெரும் அதிருப்பதியை யும், மத மேதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே பாடகி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தனபால் தலைமையில், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் வேலு நேற்று மாலை திருவெண்ணெய்நல்லுார் போலீசில் புகார் அளித்தனர். ஒன்றிய பொதுச் செயலாளர் அழகேசன், நகரச் செயலாளர் விக்னேஷ், கிளை செயலாளர் சக்திவேல் உட்பட ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கள்ளக்குறிச்சி

நகர ஹிந்து முன்னணி சார்பாக கள்ளக்குறிச்சி போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டதுகள்ளக்குறிச்சி காந்தி ரோடிலிருந்து ஐயப்ப சுவாமி படத்துடன், காவி கொடி ஏந்தியபடி, கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் இசைவாணியை கைது செய்ய வேண்டும் என புகார் மனு அளித்தனர்.இதில் ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் அருண், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக், ஒன்றிய செயலாளர் மோகன், நகர நிர்வாகிகள் வெங்கடேசன், சதீஷ், சுப்ரமணி, முத்துராமலிங்கம், மணி மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளியிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி