உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டை உடைத்து பணம் நகை திருட்டு; விக்கிரவாண்டி அருகே துணிகரம்

வீட்டை உடைத்து பணம் நகை திருட்டு; விக்கிரவாண்டி அருகே துணிகரம்

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பாபு, 50:டிரைவர் :இவர் கடந்த 8ம் தேதி அன்று இரவு இவரது சகோதரர் இறந்ததால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான பெ.அகரம் கிராமத்திற்கு சென்று விட்டார்.துக்க நிகழ்ச்சி முடிந்து நேற்று வீட்டிற்கு வந்த போது முன்புற கேட் மற்றும் கதவுகள் உடைத்திருந்து கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்து ரொக்க பணம் ரூபாய் 75 ஆயிரம் மற்றும் 3 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் பாபு புகார் செய்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !