வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆக, இதுக்கு காரணம் மாடல் அரசின் சோமபான கடைதான்.
செஞ்சி; விழுப்புரம் மாவட்டம், தாமரைகுளம் தங்கராசு, 29; கூலி தொழிலாளி. இவரது மனைவி இரு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றார். இவருக்கு, 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளை தங்கராசுவின் தாய் வளர்க்கிறார்.தங்கராசு, ஓராண்டிற்கு முன் செங்கல்பட்டில், செங்கல்சூளையில் வேலை செய்தபோது உடன் வேலை செய்த ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த, சின்னபொன்னு, 34, என்ற விதவை பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சின்னபொன்னுவிற்கு, 15, 11 மற்றும் 9 வயதில் மூன்று மகன்கள் உள்ளனர்.அவர்களை, செவலபுரையில் உள்ள தன் அக்கா வீட்டில் தங்க வைத்துள்ளார். சில மாதங்களாக தங்கராசுவும், சின்னபொன்னும் செஞ்சி செங்கல்சூளையில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து முருகன்தாங்கல் வீட்டிற்கு வந்தனர்.அங்கு, தாய் வீட்டிற்கு சென்று வருவதாக சின்னு பொன்னு கூறியதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, போதையில் இருந்த தங்கராசு கட்டையால் தாக்கியதில், தலையில் காயமடைந்த சின்னபொன்னு உயிரிழந்தார். சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து தங்கராசுவை கைது செய்தனர்.
ஆக, இதுக்கு காரணம் மாடல் அரசின் சோமபான கடைதான்.