நிழற்குடை திறப்பு விழா
திருவெண்ணெய்நல்லுார்: ருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் கிராமத்தில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிழற்குடை திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் மணிகண்ணன், லட்சுமணன், சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், துணைச் சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் அமைச்சர் பொன்முடி பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார். தாசில்தார் செந்தில், பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், ரவி, இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.