| ADDED : பிப் 19, 2024 05:34 AM
செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தில் 3 இடங்களில் புதிய பணிகளை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.செஞ்சி அடுத்த பொன்பத்தி - சக்கராபுரம் சாலையை கிராம சாலைகள் திட்டத்தில் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை பணி, கோணை - அனந்தபுரம் சாலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம், செஞ்சியில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டவும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தலைமை தாங்கினர்.ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பேரூராட்சி துணைச் சேர்மன் ராஜலட்சுமி ராஜன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர்கள் அனுசுயா மணிபாலன், பிருந்தா சக்தி ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.நபார்டு மற்றும் கிராம சாலைகளின் உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி, விவசாய அணி மாவட்ட தலைவர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் துரை, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.