உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா

பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி தென்னமாதேவியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.தென்னமாதேவி காலனி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 283 ரேஷன் கார்டுதாரர்களுக்கென, பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் கூட்டுறவு சார்பதிவாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் விமல்ராஜ் வரவேற்றார்.புகழேந்தி எம்.எல்.ஏ., ரேஷன் கடையை திறந்து வைத்து பொது மக்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார்.முன்னதாக பூத்தமேடு பகுதியில் 63 கேவி வீட்டு உபயோக மின்மாற்றியை இயக்கி வைத்தார். செயற் பொறியாளர் சுரேஷ்குமார், உதவி செயற் பொறியாளர்கள் அண்ணா துரை, சரவணன், வருவாய் ஆய்வாளர் தயாநிதி, ஒன்றிய துணைச் சேர்மன் உதயகுமார், ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் வனிதா, ஊராட்சி தலைவர் ரோஜாரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்