| ADDED : மார் 19, 2024 10:46 PM
திண்டிவனம் : 'லோக்சபா தேர்தலில் தி.மு.க.,கூட்டணி புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் வெற்றி பெறும்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.திண்டிவனத்தில் தி.மு.க., மண்டல இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில துணைச் செயலாளர் அப்துல் மாலிக் தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் வரவேற்றார்.கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில், 'நான் செஞ்சி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தொடர்ந்து நான்கு முறை கட்சி தலைமையிடம் விண்ணப்பித்தும், 2016ல்தான் எனக்கு தலைமை வாய்ப்பு வழங்கியது. நீங்கள் கட்சிக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருங்கள். நிச்சயம் உங்களுக்கு உயர்வு கிடைக்கும். வடமாநிலங்களில் கூட தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி வரவேண்டும் என அங்குள்ள மக்கள் நினைக்கின்றனர்.வரும் தேர்தலில் தி.மு.க.,கூட்டணி புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் வெற்றி பெறும். தி.மு.க.,எதிர்த்து போட்டியிடும் கட்சிகள் டிபாசிட் இழக்கும். 'இண்டியா' கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்கும்' என்றார்.இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, உதயகுமார், அண்ணாமலை, விஜயகுமார், திண்டிவனம் தொகுதி அமைப்பாளர் ரமணன், கவுன்சிலர் ரேகா நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.