சரஸ்வதி கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
திண்டிவனம் : திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சத்தியா வரவேற்றார். தாளாளர் ஸ்ரீகாந்தி பரசுராமன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார், சிவா, பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வாழ்த்திப் பேசினர்.கருத்தரங்கில், பேராசிரியர் திருநாவுக்கரசு, மலேசியா சொற்பொழிவாளர் வாசுதேவன் இலக்குமணன், குணசேகர், விஜயராணி, சியாமளா ஆகியோர் தமிழ் நுால்களில் பன்முகப் பார்வை தலைப்பில் சிறப்புரையாற்றி, கருத்தரங்க நுாலை வெளியிட் டனர்.கருத்தரங்கில் பல்வேறு பகுதிகளிலிருந்து பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ், புத்தகம் வழங்கப்பட்டது.தமிழ்த்துறை உதவி பேராசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.