மேலும் செய்திகள்
தி.மு.க.,பொறியாளர் அணி நேர்காணல் நிகழ்ச்சி
20-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமனங்களுக்கான நேர்காணல் நடந்தது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த நேர்காணலுக்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தயா இளந்திரையன், மாநில மகளிரணி தேன்மொழி முன்னிலை வகித்தனர்.மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பிரதீப் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, தி.மு.க., பொறியாளர் அணி பொறுப்புக்கு நியமனம் செய்வதற்கு, இன்ஜினியரிங், டிப்ளமோ முடித்த நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினர். தகவல் தொழில் நுட்ப பிரிவு அன்பரசு, பாலாஜி, ஸ்ரீவினோத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
20-Mar-2025