உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோடை கால சிறப்பு பயிற்சி வகுப்பு விழுப்புரம் மாணவர் பங்கேற்க அழைப்பு

கோடை கால சிறப்பு பயிற்சி வகுப்பு விழுப்புரம் மாணவர் பங்கேற்க அழைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு ஜவகர் சிறுவர் பள்ளியில் இன்று துவங்கும் கோடை கால சிறப்பு பயிற்சி வகுப்பில் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் அரசு ஜவகர் மன்ற திட்ட அலுவலர் மஞ்சம்மாள் செய்திக்குறிப்பு:விழுப்புரம் அரசு இசை பள்ளியில், தமிழக அரசு ஜவகர் சிறுவர் மன்றம், அரசு கலை பண்பாட்டுத் துறை தஞ்சாவூர் மண்டலத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், ஓவியம், சிலம்பம் ஆகிய நான்கு கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆண்டு தோறும் கோடை கால பயிற்சி வகுப்பும் நடந்து வருகிறது. இந்தாண்டு கோடை பயிற்சி வகுப்பு, இன்று (மே 1) வியாழக்கிழமை துவங்கி மே 10ம் தேதி வரை, 10 நாட்கள் பயிற்சி நடக்கிறது. தினமும் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை பயிற்சி நடக்கும்.விழுப்புரம் பழைய கோர்ட் சாலையில் உள்ள அரசு இசைப்பள்ளி வளாகத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. பயிற்சி நிறைவு நாளன்று, மாணவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்பை, விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை