மேலும் செய்திகள்
தார் சாலை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
15-Jun-2025
செஞ்சி : செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். வல்லம் ஒன்றிய செயலாளர் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பழங்குடியினர் மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவைகளை வழங்கி பேசினார்.ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், துணை பி.டி.ஓ.,க்கள் பழனி, சசிகலா, வருவாய் ஆய்வாளர்கள் பரமசிவம், குமார், ரங்கநாதன் பங்கேற்றனர்.
15-Jun-2025