உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விதை வணிக உரிமம் வழங்கல்

கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விதை வணிக உரிமம் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்டது.விழுப்புரம் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் அலுவலகத்தில், அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில், 150 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டது. கூட்டுறவு சங்க இணை பதிவாளர் விஜயசக்தி முன்னிலை வகித்தார். விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன், உரிமங்கள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி