வாக்காளர் திருத்த பணி படிவம் வழங்கல்
கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியத்தில், கண்டமங்கலம், பெரிய பாபுசமுத்திரம், ரஜபுத்திரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான படிவங்களை அரசு அலுவலர்கள் வழங்கினர். இதனை வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி பார்வையிட்டார். கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்மணி, கிளைச் செயலாளர் ஜனகராஜன், மாவட்ட நிர்வாகிகள் மணிமாறன், ரமேஷ், பழனி, கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.