உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்டத்தில் ஜமாபந்தி இன்று துவக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஜமாபந்தி இன்று துவக்கம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து தாலுகாக்களிலும் இந்தாண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமா பந்தி) இன்று முதல் துவங்குகிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டுக்கான ஜமாபந்தி முகாம் இன்று 21ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. சனி, ஞாயிறு தவிர்த்து, பிற நாட்களில் அந்தந்த தாலுகாக்களில், உரிய வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில், கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான் தலைமையில் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை முகாம் நடைபெறும்.இதே போல், டி.ஆர்.ஓ., அரிதாஸ் தலைமையில் வானுார் தாலுகாவில் 21 முதல் 28ம் தேதி வரையிலும், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் தலைமையில் செஞ்சி தாலுகாவில் 21 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.தொடர்ந்து, விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் விக்கிரவாண்டி தாலுகாவில் 21 முதல் 28 வரையிலும், சமூக பாதுகாப்பு திட்டம் சப் கலெக்டர் முகுந்தன் தலைமையில் விழுப்புரம் தாலுகாவில் 21 முதல் 30 வரையிலும் நடக்கிறது.உதவி ஆணையர் (கலால்) தலைமையில், கண்டாச்சிபுரம் தாலுகாவில் 21 முதல் 27 வரையிலும், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் திண்டிவனம் தாலுகாவில் 21 முதல் 29 வரை நடக்கிறது.மேலும், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் மரக்காணம் தாலுகாவில் 21 முதல் 27 வரையிலும், ஆதிதிவிடர் நல அலுவலர் தலைமையில் மேல்மலையனுார் தாலுகாவில் 21 முதல் 27 வரையிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறைகேட்புக் கூட்டம் ரத்து

மாவட்டத்தில், அனைத்து தாலுகாவிலும், இன்று 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஜமாபந்தி முகாம் நடக்கிறது. இதனால், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெறாது. இதனையடுத்து, ஜூன் 2ம் தேதி திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் கூட்டம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை