மேலும் செய்திகள்
துவங்கியது ஜமாபந்தி; மனு கொடுக்க மக்கள் ஆர்வம்
21-May-2025
Match ஒன்று Qualifiers மூன்று
19-May-2025
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரத்தில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பொன்முடி எம்.எல்.ஏ., பட்டா வழங்கினார்.கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட மணம்பூண்டி மற்றும் முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உதவி ஆணையர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன்,ராஜீவ்காந்தி,பிரபு முன்னிலை வகித்தனர்.தாசில்தார் முத்துவரவேற்றார்.திருக்கோவிலுார் எம்.எல்.ஏ பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பட்டா, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பலன்களை வழங்கினார். இதில் முகையூர் மற்றும் மணம்பூண்டி ஒன்றியங்களைச் சேர்ந்த 73 பயனாளிகள் பயனடைந்தனர். கூடுதல் தாசில்தார் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் முகையூர் ஒன்றிய சேர்மேன் தனலட்சுமி உமேஷ்வரன்,ஒன்றியக்குழு உறுப்பினர் மீனாகுமாரி ஏழுமலை மற்றும் திரளான பொதுமக்கள்,பயனாளிகள் கலந்துகொண்டனர்.
21-May-2025
19-May-2025