பிளஸ் 2 தேர்வில் ஜான்டூயி மெட்ரிக் பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி சாதனை
விழுப்புரம்: விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவன் லோகேஷ்வரன் 600க்கு 587 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஹரினி 580 மதிப்பெண்களுடன் 2வது இடமும், மாணவன் ராகேஷ் 578 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பிடித்தனர்.வேதியியல் பாடத்தில் ஒருவரும், கணினி அறிவியலில் 7, கணினி பயன்பாடு பாடத்தில் 3 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 570 மதிப்பெண்ணுக்கு மேல் 5 பேரும், 550க்கு மேல் 22 பேரும், 500க்கு மேல் 65 பேரும், 450க்கு மேல் 129 பேர் பெற்றுள்ளனர்.பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மற்றும் பாடவாரியாக நுாறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளிக்கு நுாறு சதவீதம் தேர்ச்சி அளித்து, மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர், பொறுப்பாசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு, பள்ளி தாளாளர் வீரதாஸ் பாராட்டி பரிசளித்தார்.முதன்மை செயலர் ெஷர்லி வீரதாஸ், முதன்மை முதல்வர் எமர்சன் ராபின், முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ராபின் ஆகியோர் உடனிருந்தனர்.