ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவி மாவட்டத்தில் சிறப்பிடம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்த ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவியை கலெக்டர் பாராட்டினார்.விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ேஹமாதேவி 596 மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்துள்ளார். இம்மாணவி கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானை சந்தித்து வாழ்த்து பெற்றார்.பள்ளி தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் முதல்வர் உடனிருந்தனர்.மேலும், அடுத்த நிலையில் 594 மதிப்பெண் பெற்ற தரணி, ராகவி மற்றும் 592 மதிப்பெண் பெற்ற ரூபிகா, புவிசா லட்சுமி ஆகியோரை தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.தொடர்ந்து இப்பள்ளி 18 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சியும், மாவட்ட அளவில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பிடமும் பிடித்து வருகிறது.