உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாஜி கருவூல அதிகாரி வீட்டில் நகை கொள்ளை

மாஜி கருவூல அதிகாரி வீட்டில் நகை கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அரசு ஊழியர் நகரைச் சேர்ந்தவர் ராமநாதன், 66; ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி. இவரது குடும்பம், சென்னையில் உள்ள நிலையில், ராமநாதன் மட்டும், வசித்து வருகிறார்.கடந்த 1ம் தேதி சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டி கொண்டு, சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு சென்றார். நேற்று காலை 6:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ