மேலும் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாம்
14-Mar-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.கல்லுாரி தாளாளர் விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் டாக்டர் வெங்கடேஷ் வரவேற்றார். சென்னை ராயல் என்பீல்டு நிறுவன மனித வள மேலாளர் ஆர்த்தி மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தினார். அதில் 43 மாணவர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கினர்.வேலைவாய்ப்பு அலுவலர் சரண்குமார், அனைத்து துறை பேராசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் மோகன் நன்றி கூறினர்.
14-Mar-2025