உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேலை உறுதி திட்ட பணியாளர்கள் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்தை

வேலை உறுதி திட்ட பணியாளர்கள் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்தை

மயிலம்;மயிலம் அருகே உள்ள தழுதாளி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்தனர்.மயிலம் அடுத்த தழுதாளியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இங்கு உள்ள பொதுமக்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக இந்த கிராமத்தில் உள்ள புதுவை சாலை அருகே வரத்து வாய்க்கால் சுத்தம் செய்யும் பணிகள் வழங்கப்பட்டு நடந்தது வருகின்றது.இந்த பணிகளுக்காக பயனாளிகளின் புகைப்படங்கள் எடுக்கும் போது மயிலம் புதுச்சேரி சாலை ஓரத்தில் நிறுத்தி புகைப்படம் எடுக்கப்படுவதால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதாகவும், புகைப்படம் எடுக்கும் பணிகளை வேறு பகுதியில் நிறுத்தி எடுக்க வேண்டும் என்றும் திட்ட பயனாளிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.இதற்கான முயற்சிகள் எடுக்காத உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை 10 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயிலம் - புதுச்சேரி ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை பி.டி.ஒ., ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100 நாள் திட்டம் பயனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை