வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில் Lane discipline கடைபிடிக்க வேண்டும்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விதிமீறிய 30 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில், சென்னை போக்குவரத்து இணை ஆணையர் பாட்டப்பசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகேசன், முருகவேல் மீனா குமாரி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி புறவழிச் சாலையில் வாகனங்களுக்கு வேக பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது விதிமுறை மீறி அதிவேகமாக வந்த 30 வாகனங்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 30 வாகன ஓட்டிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதலில் Lane discipline கடைபிடிக்க வேண்டும்