மேலும் செய்திகள்
585 விதை விற்பனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை
28-May-2025
வேளாண்துறை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
16-May-2025
படைகளை குறைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை
13-May-2025
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட விதைப் பண்ணைகளில் விதை ஆய்வு இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டு, சான்றுபெறாத தர்பூசணி விதைகளை விற்க தடை விதித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், முருக்கேரி, விக்கிரவாண்டி, விழுப்புரம், இருவேல்பட்டு ஆகிய பகுதிகளில் இயங்கும் சில தனியார் மற்றும் அரசு விதை விற்பனை நிலையங்களில், சென்னை தலைமையக விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா தலைமையில், வேளாண் அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, விதை விற்பனை உரிமம், இருப்பு பதிவேடு, விற்பனை பட்டியல், கொள்முதல் பட்டியல், அரசு பதிவுச்சான்று மற்றும் விதைகள் இருப்பு வைத்துள்ள குடோன்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.அப்போது, திண்டிவனம், மரக்காணம் பகுதியில் பதிவுச்சான்று இல்லாத 33 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தர்பூசணி விதைகளை விற்பனை செய்ய தடை விதித்தார். மேலும், விதை மூட்டைகளை, முறையாக மரச்சட்டங்கள் மீது அடுக்கி, காற்றோட்ட வசதியுள்ள இடங்களில் சேமிக்கவும், விதைகளை ஈரப்பதம் பாதிக்காமல், உரம் மற்றும் பூச்சி மருந்துகளுடன் கலக்காமல் தனியாக வைத்து பராமரிக்க வேண்டும். மாவட்ட விதை ஆய்வு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.அதைத் தொடர்ந்து, அரசு விதைப்பண்ணை, விதை பரிசோதனை நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
28-May-2025
16-May-2025
13-May-2025