உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்பட்டு ஏரி உடைப்பு : ஒன்றிய சேர்மன் ஆய்வு

கல்பட்டு ஏரி உடைப்பு : ஒன்றிய சேர்மன் ஆய்வு

விழுப்புரம்: கல்பட்டு ஏரி உடைப்பை ஒன்றிய சேர்மன் பார்வையிட்டு, உடனடியாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காணை ஒன்றியம், கல்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியின் கரை, கன மழையால் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதை காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, நேரில் சென்று பார்வையிட்டார். கரை உடைப்பை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, தி.மு.க., காணை தெற்கு ஒன்றிய செயலாளர், வழக்கறிஞர் ராஜா, கிளை செயலாளர்கள் அன்பழகன், மாய கிருஷ்ணன், சுப்ரமணியன், செந்தில், தகவல் தொழில்நுட்ப அணி கதிரவன், நிர்வாகிகள் ராகுல், ஆனந்த், மணிகண்டன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை