மேலும் செய்திகள்
பட்டதாரி பெண் மாயம்
24-Nov-2024
விக்கிரவாண்டி: விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் டிசம்பர் மாத இறுதியில் முழுமையாக போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட உள்ளது.விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துாரத்திற்கு ரூ.6,500 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில், கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இரு மார்க்கங்களிலும் தலா 30 மீட்டர் அகலம், 64 மீட்டர் நீளம் கொண்ட இரும்பினால் செய்யப்பட்ட 'பாஸ்டிங் கர்டர்' பொருத்தி, அதன் மீது கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக, கடந்த அக்டோபர் மாதம் புதுச்சேரி-விழுப்புரம் மார்க்க பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இந்த பாலத்தை தினமும் சராசரியாக 8,500 இலகு, கனரக வாகனங்கள் உட்பட மொத்தம் 11 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன.இந்நிலையில், விழுப்புரம்-புதுச்சேரி மார்க்க மேம்பாலப் பணி 99 சதவீதம் முடிந்து, இறுதிக்கட்டமாக பாலத்தில் தடுப்புக் கட்டை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை, 'நகாய்' திட்ட இயக்குனர் சக்திவேல், பொறியாளர் பாலசுப்பிரமணி பார்வையிட்டு, ஆலேசானை வழங்கி வருகின்றனர். இப்பணி 2 நாளில் முடிவடைந்ததும், மேம்பாலத்தின் பாரம் தாங்கும் திறனை பரிசோதனை செய்து, சான்று பெறப்பட உள்ளது. டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மேம்பாலம் முழுமையாக போக்குவரத்திற்கு திறந்து விடவும், ஜனவரி மாதத்தில், கெங்கராம்பாளையம் டோல் பிளாசாவில் கட்டணம் வசூலிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இச்சாலையில், உயர் மின் அழுத்த கோபுரம் பிரச்னை காரணமாக நிலுவையில் இருந்த வளவனுார் - கெங்கராம்பாளையம் மேம்பால பணி முடிந்து, போக்குவரத்து திறந்து விடப்பட்டுள்ளது.
24-Nov-2024