மேலும் செய்திகள்
மண்டலாபிஷக நிறைவு விழா
04-Nov-2024
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து கம்பம் நிலை நிறுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு வெற்றி வேல்களுக்கு குளக்கரையில் அபிஷேக ஆராதனை நடந்தது. பின், வீரவாகு தேவர்கள் வீதியுலா வந்து கம்பம் ஏறினர்.இரவு வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிகள் வீதியுலாவும் அதிகாலை 3:00 மணியளவில் சூரபதுமன் சம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது.கண்டாச்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
04-Nov-2024