மேலும் செய்திகள்
மகள் மாயம்; தாய் புகார்
15-Oct-2024
மரக்காணம் : மரக்காணம் அடுத்த ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கானிமேடு - மண்டகப்பட்டு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மரக்காணம் பகுதியில் சில தினங்களாக கன மழை பொய்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் பாதிப்படைந்துள்ளது. நேற்று காலை 5:00 மணிக்கு திடீரென கன மழை பெய்தது.இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தை ஒட்டியுள்ள ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மதியம் 12:00 மணிக்கு கானிமேடு கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தின் மேல் வெள்ள நீர் ஓடியதால் கானிமேடு - மண்டகப்பட்டு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.வருவாய் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் தண்ணீர் குறையும் வரை தரைப்பாலத்தை சாலையை பயன்படுத்தக் கூடாது, என கூறி சாலையின் குறுக்கே பேரிகார்டு அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
15-Oct-2024