கருணாநிதி பிறந்த நாள் விழா மாவட்ட பொறுப்பாளர் தகவல்
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் இன்று (3ம் தேதி) முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி வெளியிட்ட அறிக்கை;தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, 101வது பிறந்தநாளையொட்டி, இன்று 3ம் தேதி விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழகங்கள் சார்பில் அந்த பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.