உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காட்டுநாயக்கன் ஜனநாயக சீர்திருத்த சங்க கூட்டம்

காட்டுநாயக்கன் ஜனநாயக சீர்திருத்த சங்க கூட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் 1 பகுதியில், தமிழ்நாடு காட்டுநாயக்கன் (பழங்குடியினர்) ஜனநாயக சீர்திருத்த சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கொளஞ்சியப்பன், திண்டிவனம் கோட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். இதில், காட்டுநாயக்கன் (பழங்குடியினர்) மக்களின் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக, சங்க கிளை பலகை திறக்கப்பட்டது. அப்போது, கவுரவ தலைவர் குப்புசாமி, கிளை தலைவர் அப்பு, துணைத் தலைவர் பாபு, செயலாளர் முருகன், துணை செயலாளர் சிலம்பரசன், பொருளாளர் மாரியப்பன், ஒருங்கிணைப்பாளர் மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை