உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.கிழக்கு கடற்கரை சாலையில், கீழ்புத்துப்பட்டு சந்திப்பில் கோட்டக்குப்பம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி பைக்கில் சென்ற நபரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர் மரக்காணம், சந்தைதோப்பு கலைஞர் நகரைச் சேர்ந்த தனசேகரன், 48; என தெரிந்தது. உடன் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !