உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செயின்ட் ஜோசப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

செயின்ட் ஜோசப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

செஞ்சி : ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் தின விழா மற்றும் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.பெற்றோர் தின விழாவிற்கு, பள்ளி தாளாளர் தெரேஸ்நாதன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கிரீன் மேரி சோபியா வரவேற்றார். ஆசிரியர் மோகன் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் டாக்டர் கோகுல், வி.ஏ.ஓ., ரஞ்சிதம் பரிசு வழங்கினர். ஆசிரியை ரூபா தொகுத்து வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இமானுவேல், துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி பங்கேற்றனர்.மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழாவிற்கு, திருப்பத்துார் துாய இருதய கல்லுாரி முன்னாள் துணை முதல்வர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். வில்கன் நிறுவன தலைவர் லேவிபால் மழலையர்களுக்கு பட்டமளித்து கவுரவித்தார். மழலையர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ