மேலும் செய்திகள்
தமிழக உரிமை மீட்பு பயணம் அன்புமணி பிரசாரம்
15-Aug-2025
விழுப்புரம்: கோலியனுார் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க., சார்பில், நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடைபெற்றது. கண்டம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட தொழிற் சங்க செயலாளர் மனோ தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ரகுபதி, அவைத்தலைவர் அய்யனார், கிளை பொறுப்பாளர் பிரபு, சதீஷ் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் 200 பேருக்கு நோட்டு, பேனா, தேர்வு அட்டை மற்றும் கல்வி உபகரணங்களை மனோ வழங்கினார். அதேபோல, கப்பூர் ஊராட்சியில் மாவட்ட பிரதிநிதி அய்யனார் தலைமையிலும், கிளை நிர்வாகி சிவகுமார் முன்னிலையிலும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, வி கொளத்தூர் ஊராட்சியில் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் வெற்றிவேல் தலைமையில், நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கிளை செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ஞானவேல் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் கொட்டப்பாக்கத்துவேலி கிராமத்தில் கிளை செயலாளர் தவசி வேல்முருகன் தலைமையில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. அவை தலைவர் மணிகண்டன், கிளை நிர்வாகி மோகன்ராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவா, அய்யூர் அகரம் கிளைச் செயலாளர் பலராமன், திருப்பச்சாவடி மேடு கிளை செயலாளர் பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
15-Aug-2025