உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடித்து கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடித்து கொண்டாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது. விழுப்புரத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விழுப்புரம் வி.மருதுார் பஜனை கோவில் தெரு, ஸ்ரீ சந்தானவேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் கிருஷ்ணர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10:35 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடந்தது. லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் தொடங்கி வைத்தனர். சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, காங்., நகர தலைவர் செல்வராஜ், ம.தி.மு.க., நகர செயலாளர் சம்மந்தம், கவுன்சிலர் ஸ்ரீதேவி. முன்னாள் கவுன்சிலர் தனுசு மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை