உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவிலில் 11ம் தேதி கும்பாபிஷேகம்

வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவிலில் 11ம் தேதி கும்பாபிஷேகம்

விழுப்புரம்: வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவிலில் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிஷேக விழா நாளை (10ம் தேதி) காலை 7.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம், கோ பூஜைகள் நடக்கிறது. மாலை முதல் கால யாகபூஜை நடக்கிறது. நாளை மறுநாள் 11ம் தேதி காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கலசம் புறப்பாடும், காலை 9.00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை உற்சவர் கங்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருவீதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வாணியம்பாளையம் கிராமத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !