உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு குண்டாஸ்

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு குண்டாஸ்

விழுப்புரம், : திண்டிவனம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட புதுச்சேரி வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்தவர் ஹிதேஷ்ஷா, 44; புதுச்சேரி, நோனாங்குப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன், 35; இருவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி பழகினர்.லோகநாதன், குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி, கூட்டேரிப்பட்டு சாலைக்கு வருமாறு கூறிஉள்ளார். அதன்படி, காரில் 35 லட்சம் ரூபாயுடன் கூட்டேரிப்பட்டு சாலைக்கு சென்ற ஹிதேஷ்ஷாவை, லோகநாதன் உட்பட அடையாளம் தெரியாத 7 பேர் தாக்கி பணம் மற்றும் நகையை பறித்து சென்றனர். இவ்வழக்கில் லோகநாதனை, ரோஷணை போலீசார் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.இவரது குற்ற செயலைத் தடுக்கும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., தீபக் சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பழனி உத்தரவைத் தொடர்ந்து, நேற்று ரோஷணை போலீசார், லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை, கடலுார் மத்திய சிறை போலீசாரிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ