கூலித் தொழிலாளி தற்கொலை
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை கொண்டார்.விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் ராஜி, 30: கூலித் தொழிலாளி. இவர் கடந்த 23ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது வயிற்று வலியால் களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார்.உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.