அரசு மருத்துவமனை கட்டடம் லட்சுமணன் ஆய்வு
விழுப்புரம் : வளவனுாரில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடத்தின் கட்டுமான பணியை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய் தார். விழுப்புரம் அருகே வளவனுாரில், விழுப்புரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், அரசு மருத்துவமனையில் புதிதாக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கூடுதல் கட்ட டத்தின் கட்டுமான பணியை, லட்சுமணன்எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகளின் நிலவரத்தை கேட்டறிந்த அவர் பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்கும்படி பொதுப்பணித்துறையினரிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, வளவனுார் பேரூராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா, செயல் அலுவலர் அண்ணாதுரை, செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், வழக்கறிஞர் சுவைசுரேஷ், துணை தலைவர் அசோக், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, அவை தலைவர் சரபோஜி, ராஜேந்திரன், பெரியசாமி, ரகுமான், வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.