உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நில தகராறு: 2 பேர் கைது

நில தகராறு: 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நில தகராறில் தம்பதியைத் தாக்கிய, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பத்தைச் சேர்ந்த ஏழுமலை, 44; இவரது அண்ணன் தயாளன், 54; இவர்களுக்கு, அதே கிராமத்தில் உள்ள நிலத்திற்கு, பொது கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதில், தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.கடந்த 10ம் தேதி ஏழுமலை தரப்பினர் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, தயாளன் தரப்பினர் தட்டிக் கேட்டு, ஏழுமலை அவரது மனைவி சுந்தராதேவியையும் தாக்கினர்.ஏழுமலை அளித்த புகாரின் பேரில், தயாளன், 54; அவரது மனைவி வரலட்சுமி, 50; மகன் கிருஷ்ணராஜ், 27; ஆகியோர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தயாளன், கிருஷ்ணராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை