மேலும் செய்திகள்
மகளை மணமுடித்து தருவதாக ரூ.18.50 லட்சம் மோசடி
11-Apr-2025
விழுப்புரம்: திண்டிவனம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாபுராவ் பட்டேல் மனைவி மாலதி,62; இவருக்கு பவித்ரா, லீனா என்ற இரு மகள்களும், பிரமோத் பட்டேல், தீபக் பட்டேல் என்ற இரு மகன்களும் உள்ளனர். பாபுராவ் பட்டேல் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி இறந்தார்.இவர் உயிரோடு இருந்தபோது, கடந்த 1997 ம் ஆண்டு தனது பெயரில் திண்டிவனம், காவிரிபாக்கம் பகுதியில் 68 சென்ட் இடத்தை கிரையம் பெற்று அனுபவித்து வந்தார். இவர் இறந்த பிறகு, அவருடைய மகள் பவித்ரா, தனது பெயருக்கு தந்தை உயில் எழுதி கொடுத்தது போல் தந்தை கையெழுத்தை போலியாக போட்டு, போலி பத்திரம் தயாரித்துள்ளார். குட்டி, நெடுமாறன் ஆகியோர் சாட்சிகளாக கையொப்பம் போட்டுள்ளனர்.இதன் மூலம் பவித்ரா, தனது மகன் அபிஷேக் என்பவருக்கு ஆவண எழுத்தர் சிவா, ராமச்சந்திரன், சார் பதிவாளர் ரமேஷ் ஆகியோர் மூலம் கிரையம் செய்து, நிலத்தை அபகரித்துள்ளனர்.இதுகுறித்து தாய் மாலதி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்தார். இதன் பேரில், பவித்ரா, அவரது மகன் அபிஷேக் மற்றும் ரமேஷ், சிவா, ராமச்சந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, பவித்ரா,46; அபிஷேக்,29; இருவரை கைது செய்தனர்.
11-Apr-2025