நிலங்களை அளவீடு செய்வோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி
விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட நில உரிமையாளர்கள், நிலங்களை அளவீடு செய்ய அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:நில உரிமையாளர்கள் தங்களின் நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தபட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்தனர். இந்த அலுவலங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி துவங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பொதுமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நிலஅளவை கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் சிட்டிசன் போர்டல் மூலமாக இணைய வழியில் செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இ-சேவை மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். நில உரிமைதாரர்கள் தங்களின் நிலங்களை அளவீடு செய்ய பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.நிலஅளவை செய்யப் படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது மொபைல் மூலம் தெரிவிக்கப்படும். நில அளவை செய்த பின், மனுதாரர் மற்றும் நில அளவர் கையெழுத்திட்ட அறிக்கை, வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்து மனுதாரர் https://eservices.tn.gov.in/ இணையவழி சேவை மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.