ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்கம்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் வாக்கூரில் விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவங்கப்பட்டது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தமிழக அரசின் புதிய திட்டமான ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார். இதையடுத்து விக்கிரவாண்டி ஒன்றியம் வாக்கூரில் நடந்த விழாவிற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார்.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெய்சன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் கங்கா கவுரி வரவேற்றார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஊட்டசத்து பயிறு விதைகள், காய்கறிவிதைகள், பழமரக்கன்றுகளை விவசாயிகளுக்கும் ,பொதுமக்களுக்கும் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் காய்கறி, பழமரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.ஒன்றிய செயலாளர் ரவிதுரை, வேளாண்மை அலுவலர்கள் கவிப்பிரியன், துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ் குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் ,அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள்,பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.