உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட துவக்க விழா

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட துவக்க விழா

வானுார் : மொரட்டாண்டி கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்ட துவக்க விழா நடந்தது. தமிழக அரசு, வேளாண் துறை மூலம் விவசாயிகள் அல்லாத அனைத்து பொதுமக்களுக்கும் காய்கறிகள் விதைத் தொகுப்பு, பயிறு வகைகள் விதைத்தொகுப்பு மற்றும் பழச்செடிகள் தொகுப்புகளை வழங்கி, இல்லம் தோறும் வளர்க்கும் பொருட்டு ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டத்தை துவக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மொரட்டாண்டி கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட துவக்க விழா நடந்தது. வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் உஷா முரளி, திட்டத்தை துவக்கி வைத்து, 40 பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பயறு வகை விதைகள் மற்றும் பழ மரத் தொகுப்புகளை வழங்கினார். திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் கீதா பங்கேற்று, காய்கறி தொகுப்பு, பழ மரக்கன்றுகளை எவ்வாறு வீட்டு தோட்டத்தில் பாதுகாப்பது குறித்து விளக்கினார். வேளாண் அலுவலர் ரேவதி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண் அலுவலர் மஞ்சு, ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி