உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மானியத்துடன் புல் நறுக்கும் இயந்திரம்

மானியத்துடன் புல் நறுக்கும் இயந்திரம்

விழுப்புரம்:மாவட்ட விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், புல் நறுக்கும் இயந்திரம் வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், தீவன விரையத்தைக் குறைக்கவும், கால்நடைகளின் செரிமான தன்மையை அதிகரிக்கவும், உற்பத்தித்திறனைப் பெருக்கவும், கால்நடைத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, 2025--26ம் ஆண்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் மின்சார மூலம் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரங்கள், 150 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் விண்ணப்பதாரர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். மொத்த ஒதுக்கீட்டில், 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகத்தை அணுகி, விபரங்களை அறியலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன், வரும் 20ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ