மேலும் செய்திகள்
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
12-May-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் விவசாயிகளுக்கு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.தமிழ்நாடு சட்ட விழிப்புணர்வு விவசாயிகள் சங்கம் மற்றும் மாற்றத்தை நோக்கி அமைப்பு சார்பில் நடந்த பயிற்சி முகாமிற்கு ரிஸ்வான் அகமதுல்லா தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் முத்துச் செல்வன், மாநில நிர்வாகிகள் சம்பத்குமார், சீத்தாராமன், மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அய்யனார் வரவேற்றார் .மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பயிற்சியை துவக்கி வைத்தார்.விவசாயிகளுக்கு அரசு அலுவலக மனு எழுதும் பயிற்சி, தகவல் அறியும் உரிமை சட்டம், புதிய குற்றவியல் சட்டங்கள், பட்டா, பத்திர பதிவு சட்டங்கள் குறித்து குருசாமி, சதீஷ்குமார், தீபக்ராஜப்பா பயிற்சி அளித்தனர்.விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், மாவட்ட வேளாண்மை விற்பனை குழு முருகன், ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
12-May-2025