சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி சாலையில், விக்கிரவாண்டி டோல்பிளாசா அருகே வராக நதி ஆற்று பாலத்தின் மீது தலையில் அடிபட்டு சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. நேற்று அதிகாலை, 2:30 மணி அளவில் அவ்வழியாக சென்ற லாரி டிரைவர் இதை பார்த்து, டோல்பிளாசா ஊழியர் களிடம் கூறினார். தகவலின்படி வனத் துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். தலை, கால்கள் அடிபட்டு இறந்த சிறுத்தைக்கு, 3 வயது என தெரிந்தது. சிறுத்தை உடலை ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரத்திற்கு ஏற்றி சென்றனர். பின், வனத்துறை ஊழியர்கள், சிறுத்தையின் உடலை எரித்தனர்.