மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
13-Jul-2025
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. கண்டாச்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்க்தின் 2025-26ம் ஆண்டிற்கான தலைவராக ஜெகதீசன், செயலாளராக செல்வராஜ், பொருளாளராக அசோக்குமார் பதவி ஏற்றனர். முன்னாள் மாவட்ட ஆளுநர் முரளி வாழ்த்தி பேசினார். முதல் துணை ஆளுநர் கனகதாரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டாம் துணைநிலை ஆளுநர் கமல்கிஷோர் ஜெயின் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தார். பார்வைக்கோர் பயணம் மாவட்ட தலைவர் சிவகாந்தன் சேவைப் பணிகளை துவக்கி வைத்தார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், .ஊராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. தலைவர் மூர்த்தி, சாசன தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரவிக்குமார், தலைவர் கமலக்கண்ணன், வட்டார தலைவர் தேன்மொழி மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், பிரகாஷ், குணசேகரன், தங்கவேல், ராஜேந்திரன், குரு, சுகுமாறன், ஜெகன், ராமதாஸ், பார்த்தசாரதி, ஜெயச்சந்திரன், மேகநாதன், பெருமாள். ஊராட்சி தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார், தாசில்தார் முத்து, சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நகர லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செய்தனர்
13-Jul-2025