உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாராயம் கடத்தியவர் தடுப்புக் காவலில் கைது

சாராயம் கடத்தியவர் தடுப்புக் காவலில் கைது

விழுப்புரம் : சாராயம் கடத்தலில் ஈடுபட்ட வரை போலீசார், தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் கடந்த ஏப்., 5ம் தேதி புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் மது பாட்டில், சாராயம் கடத்தி வந்த புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த கவியரசன், 50; என்பவரை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். கவியரசன் மீது கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் சாராயம் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, கவியரசனை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், கவியரசன் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை, கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீசார் கடலுார் மத்திய சிறையில் உள்ள கவியரசனிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ