இலக்கிய போட்டி மாணவி அசத்தல்
விழுப்புரம்: மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியை ஆசிரியர்கள் பாராட்டினர். திண்டிவனம் அடுத்த சலவாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 8 ம் வகுப்பு மாணவி பத்மஸ்ரீ; இவர், மாவட்ட அளவில் நடந்த இலக்கிய மன்ற போட்டியில் கவிதை எழுதுதல் பிரிவில் முதலிடம் பெற்றார். இதனால், மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவியை பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள், பாராட்டினர்.