உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறைந்த அழுத்த மின்சாரம்; கலெக்டர் ஆபீசில் மக்கள் மனு

குறைந்த அழுத்த மின்சாரம்; கலெக்டர் ஆபீசில் மக்கள் மனு

விழுப்புரம்; குறைந்த அழுத்த மின்சாரம் வருவதை சீரமைக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். மனு விபரம்: விழுப்புரம் வழுதரெட்டி, ராமகிருஷ்ணா நகர், எம்.டி.கார்டன், பி.டி.கார்டன், கணேஷ் நகர் பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கிரைண்டர், பேன், மோட்டார் எதுவும் இயங்க முடியாத அளவிற்கு குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது. இதனால், மின்சாதன பொருட்கள் பழுதாகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக மின்துறை பொறியாளரிடம் பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு முழுமையான மின்சாரம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ