உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: செஞ்சி அடுத்த களையூர் முத்து மாரியம்மன் கோவிலில் ஜீர்னோதாரண மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கோபூஜை, அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, லட்சுமி, நக்கிரக ஹோமமும், மாலை 4:00 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், முதற்கால ஹோமம், இரவு 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால ஹோமம், நாடி சந்தானம், வேதிகார்ச்சனையும், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9.30 மணிக்கு யாத்ராதானமும், கடம் புறப்பாடும், 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மகாதீபாராதனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை